மராட்டிய ஆளுநருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திப்பு
மராட்டிய ஆளுநரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்துப் பேசினார்.
மும்பை,
மராட்டிய ஆளுநர் பிஎஸ் கோஷ்யாரியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்து பேசினார். மராட்டியத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளுநர் விடுத்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் , எந்த அரசியல் விவகாரமும் இதில் இடம் பெறவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபுல் படேல் கூறும் போது, ஆளுநர் விடுத்த அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறினார்.
இந்த சந்திப்பில் அரசியல் விவகாரம் குறித்து பேசப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய போது, “இது வழக்கமான சந்திப்பு எனவும் அரசியல் சந்திப்பு இல்லை எனவும் விளக்கமளித்தார். எனினும், சிவசேனாவுடன் ஏற்பட்டுள்ள சில கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஆளுநரை சரத்பவார் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்துள்ளது.
Related Tags :
Next Story