தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Himachal Pradesh government has extended the lockdown to control coronavirus in the state for another five weeks

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
இமாச்சல பிரதேசத்தில் ஜூன்30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிம்லா, 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இமாச்சல பிரதேசத்தில் மேலும் 5 வாரங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மலைப்பிரதேசமான இமாச்சலில் இதுவரை 214- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இமாச்சல பிரதேசத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கில்  தளர்வுகளை பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசும் அறிவித்து வரும் நிலையில்,  இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பிறப்பித்த தேசிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.  மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 62- வது நாளாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொலிவியா அதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று
பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2. மும்பை தாராவியில் கொரோனா பரவல் வேகம் குறைந்தது- மத்திய சுகாதாரத்துறை பாராட்டு
தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைந்து இருப் ப தற்கு மத் திய சுகாதா ரத் துறை பாராட்டு தெரி வித்து உள்ளது.
3. சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்
சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரம் வெளியீடு
தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை ஸ்ரேயா
கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகை ஷ்ரேயா தெரிவித்துள்ளார்.