சிறப்பு ரெயில்களின் தாமதம் குறித்து ரெயில்வே விளக்கம்
சிறப்பு ரெயில்களின் தாமதம் குறித்து ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
லக்னோ,
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்கள் தாமதமாக செல்வதால், அந்த தொழிலாளர்கள் சொல்லொணா துயரங்களை சந்தித்து வருகிறார்கள்.
குறிப்பாக, கோவாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவுக்கு சென்ற ரெயில், 28 மணி நேரத்துக்கு பதிலாக, 72 மணி நேரம் கழித்து சென்றடைந்தது. இதனால், அதில் இருந்த குழந்தைகளும், பெண்களும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். ரெயில்வே நிர்வாகத்தாலும் உதவ முடியவில்லை. இதனால், பல ரெயில் நிலையங்களில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், தாமதத்துக்கான காரணம் குறித்து லக்னோ மண்டல ரெயில்வே மேலாளர் சஞ்சய் திரிபாதி கூறுகையில், “வந்து சேரும் ரெயில்களில் பயணிகள் இறங்கவும், கிருமிநாசினி தெளிக்கவும் காலதாமதம் ஆகிறது. நூற்றுக்கணக்கான ரெயில்கள், கிழக்கு உத்தரபிரதேசத்துக்கு செல்ல வேண்டியவை என்பதால், நெரிசல் உண்டாகி, வேறு பாதைக்கு திருப்பி விடப்படுவதால் தாமதம் ஆகிறது” என்றார்.
Related Tags :
Next Story