ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின்: 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து - ஆய்வு முடிவு


ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின்: 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து - ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 26 May 2020 7:30 PM GMT (Updated: 26 May 2020 7:30 PM GMT)

ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் ஆகிய 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் மாத்திரைகளை சேர்த்து கொடுப்பது ஒரு ஆபத்தான கலவை, அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், அதிலும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தையும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான பாதகமான நிகழ்வுகளின் அறிக்கைகளை பகுப்பாய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

‘சர்குலேஷன்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் மாத்திரைகளை கலவையாக எடுத்துக்கொண்டவர்களுக்கு இதயத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவதாக கூறுகிறது. இது ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு வழிநடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இவ்விரு மாத்திரைகளையும் மாதக்கணக்கில் எடுத்துக் கொள்கிறபோது இதயம் செயலிழந்துபோகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Next Story