ஒரே நாளில் அதிகபட்சமாக 8,380 பேருக்கு கொரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது
ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துவிட்டது.
புதுடெல்லி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூர கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்தியாவில் 4 கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 193 பேரின் உயிரையும் இந்த கொரோனா பறித்துள்ளது. இதில் 99 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் 27 பேரையும், டெல்லியில் 18 பேரையும், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 9 பேரையும், மேற்குவங்காளத்தில் 7 பேரையும், தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் தலா 6 பேரையும், பீகாரில் 5 பேரையும், உத்தரபிரதேசத்தில் 3 பேரையும், பஞ்சாபில் 2 பேரையும், அரியானா மற்றும் கேரளாவில் தலா ஒருவரையும் கொரோனா ஒரே நாளில் பலி வாங்கி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 5,164 ஆக அதிகரித்துள்ளது.ன் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 2,197 பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் இந்த பலி எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 416, மத்தியபிரதேசத்தில் 343, மேற்குவங்காளத்தில் 309, உத்தரபிரதேசத்தில் 201, ராஜஸ்தானில் 193, தமிழகத்தில் 173 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தெலுங்கானாவில் 77, ஆந்திராவில் 60, கர்நாடகாவில் 48, பஞ்சாபில் 44, ஜம்மு காஷ்மீரில் 28, பீகார் மற்றும் அரியானாவில் தலா 20, கேரளாவில் 9, ஒடிசாவில் 7, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 5, சண்டிகார் மற்றும் அசாமில் தலா 4, மேகாலயா மற்றும் சத்தீஸ்காரில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.க்கப்பட்டவர்கள் எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,168 ஆக உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 22,333 ஆக இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் இந்த எண்ணிக்கை 18,500-ஐ தாண்டியுள்ளது.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் வருமாறு:-
குஜராத் (16,343), ராஜஸ்தான் (8,617), மத்தியபிரதேசம் (7,891), உத்தரபிரதேசம் (7,445), மேற்குவங்காளம் (5,130), பீகார் (3636), ஆந்திரா (3569), கர்நாடகா (2922), தெலுங்கானா (2499), ஜம்மு காஷ்மீர் (2341), பஞ்சாப் (2233), அரியானா (1923), ஒடிசா (1819), கேரளா (1208), அசாம் (1185), உத்தரகாண்ட் (749), ஜார்கண்ட் (563), சத்தீஸ்கார் (447), இமாசலபிரதேசம் (313), சண்டிகார் (289), திரிபுரா (268), லடாக் (74), கோவா (70), மணிப்பூர் (62), புதுச்சேரி (51), நாகாலாந்து (36), அந்தமான் நிகோபர் (33, மேகாலயா (27), அருணாசலபிரதேசம் (4), தாதர்நகர் ஹவேலி (2), மிசோரம் மற்றும் சிக்கிம் (1)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம் ஆகும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதில் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம், அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கைதான். அந்த வகையில் ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 4,613 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 86,983 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story