கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா
கொரோனா பாதிப்பில் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
புதுடெல்லி
ஊரடங்கின் 5-வது கட்டத்தின் முதல் நாளில் இந்தியா நுழையும் போது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளது. நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,90,535 ஆகும். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் படி 93322 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 91819 பேர் குணமாகி உள்ளனர். 5394 இறப்புகள் பதிவாகி உள்ளது.
மே 31 வரை 67,655 கொரோனா பாதிப்புகளுடன் மராட்டியம் நாட்டிலேயே மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் தொடர்கிறது. மாநிலத்தின் மொத்த 67 ஆயிரம் பாதிப்புகளில் மும்பை மட்டும் 39,686 ஆக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின் அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இந்தியாவில் மொத்தம் 38,37,207 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1,00,180 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story