பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
புதுடெல்லி
இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் முக்கிய பயங்கரவாத அமைப்பின் தளபதி உட்பட 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவத்தினர் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவுசரா எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானால் பயிற்சியளிக்கப்பட்ட 3 பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் எல்லையில் ஊடுருவ முயன்றனர்.
இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்திய எல்லை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு தேடுதல் வேட்டையும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story