டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடல் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
சென்னை,
டெல்லியில் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இன்று காணொலி மூலம் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டெல்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் அடுத்த ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். அதேபோல, அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரம் கழித்து எல்லையைத் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தி, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும்.
டெல்லியில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் ஆனால் ஸ்பாக்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷாக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story