விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு


விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு
x
தினத்தந்தி 1 Jun 2020 3:37 PM IST (Updated: 1 Jun 2020 3:37 PM IST)
t-max-icont-min-icon

விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 6-வது நாளான நேற்று முன்தினம் (சனிக்கிழமை), 529 விமானங்கள் இயக்கப்பட்டன.

அவற்றின் மூலம் 45 ஆயிரத்து 646 பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.

இந்தநிலையில் விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்ப்பட்டுள்ளது.


Next Story