மும்பை விஞ்ஞானிக்கு கொரோனா; நிதி ஆயோக் அலுவலக ஊழியருக்கும் தொற்று
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி,
மும்பையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானிக்கு அவருக்கு கொரோனா தொற்று ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டெல்லி தலைமை அலுவலகம் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கும் அலுவலகம் செயல்படாது என கூறப்படுகிறது. கொரோனா தொடர்பான பணியில் உள்ளவர்களை தவிர, மற்ற விஞ்ஞானிகள், பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் இந்த விஞ்ஞானி ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதனால் கொரோனா தொற்று ஏற்பட்ட விஞ்ஞானியுடன் நெருங்கிப் பழகிய சக ஊழியர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நிதி ஆயோக் அலுவலகத்தின் மூன்றாவது தளம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பதற்காக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story