கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் மோடி


கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 Jun 2020 4:26 PM GMT (Updated: 1 Jun 2020 4:26 PM GMT)

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு உதவ புதிய இணையதளத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய champions.gov.in இணைதள உதவும். கொரோனாவுக்கு எதிராக போராட ஒவ்வொருவரிடமும் நல்லிணக்கம், கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை.

கடினமான சூழ்நிலைகளில் இருந்து மக்கள் வெளியேற திருவிழாக்கள், இசை பெரிதும் உதவியுள்ளன.யோகா மற்றும் இசை மூலம் நமது உள்சக்தியை நாம் கட்டுப்படுத்தும் போது மக்கதான ஆற்றல் கிடைக்கிறது.

இசையில் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் தேவைப்படுவது போல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் நல்லிணக்கம் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை. 130 கோடி இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக கைதட்டியும், இசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story