டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை வார்டுகளாக மாறிய ரெயில் பெட்டிகள் தயார்
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை வார்டுகளாக மாறிய ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. இங்கு ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
தொடர்ந்து பரவல் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள ரெயில்பெட்டிகளை தந்து உதவ வேண்டும் என்று ரெயில்வேக்கு டெல்லி அரசு நேற்று முன்தினம் கடிதம் எழுதியது.
அதைத் தொடர்ந்து 160 படுக்கைகளுடன் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ள 10 பெட்டிகள் டெல்லி சாகுர் பஸ்தி ரெயில் நிலையத்தின் பராமரிப்பு பணி நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு 2 மாதங்களான நிலையில் இப்போது பயன்பாடுக்கு வரப்போகிறது. அந்த வகையில் நாட்டிலேயே ரெயில்பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக பயன்படுத்துகிற முதல் மாநிலம் என்ற பெயரை டெல்லி தட்டிச்செல்லும்.
Related Tags :
Next Story