இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி
மத்துய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 8,171 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது மற்றும் 204 இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துஉள்ளது. கொரோனா பாதித்த 97,581 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறி உள்ளது.
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,358 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மராட்டியம் 70,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் 2,360 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் நிதி தலைநகரான மும்பை, மாநிலத்தின் கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது, அங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 41,000 ஐ தாண்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,300 யை கடந்து இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1,413 பாதிப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளன.
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.