தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி + "||" + Allow pilgrims to perform Sami Darshan at Tirupati Ezumalayan Temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கோவிலில் 6 கால பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.