தேசிய செய்திகள்

அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி + "||" + 20 Dead In Landslides In South Assam, Several Injured

அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி
அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவுகாத்தி,

அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தெற்கு அசாமில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேர் நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்துள்ளனர்.


வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 3.5 லட்சம் மக்கள் வரை போராடி வருகின்றனர். இதில், கோல்பாரா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து நாகான் மற்றும் ஹோஜாய் உள்ளன.

இதுதொடர்பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளத்தால் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 
348 கிராமங்கள்  தண்ணீரால்  சூழப்பட்டுள்ளன. ஏறக்குறைய 27,000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.