பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை, அரபிக்கடலில் உருவாகியுள்ள நிஷர்கா புயல் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 8 ஆம் தேதி சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதன் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Tags :
Next Story