அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது. இதனால் மராட்டியம், குஜராத் மாநிங்களில் மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகின்றன. முதலில் கேரளாவில் தொடங்கும் இந்த மழை பின்னர் படிப்படியாக கர்நாடகம், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யத் தொடங்கும்.
இந்த ஆண்டு வழக்கம் போல் கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
றியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
‘நிசர்கா’ தீவிர புயலாக மாறி வடக்கு மராட்டியம்-தெற்கு குஜராத் இடையே இன்று (புதன்கிழமை) மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும், இதனால் மராட்டியத்தில் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மராட்டியம்தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
இதனால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தேசிய பேரிடர் மீட்புப்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story