இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது


இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 4 Jun 2020 10:37 AM IST (Updated: 4 Jun 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி: 

இன்று வியாழக்கிழமை நிலவரப்படி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,919ஆக உயர்ந்து உள்ளது. பலியானோர் மொத்த எண்ணிக்கை 6,075 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9304 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது  

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,06,737 ஆக உள்ளது குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 ஆக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனா  நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை - இன்று காலை 47.99 சதவீதமாக இருந்தது. 1,04,107 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது

கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால் வழக்குகள் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  மீட்பு விகிதம் வேகமாக மேம்பட்டு வருவதும் இறப்புகள் குறைவாக இருப்பதும் ஒரு நிவாரணமாகும். இறப்பு விகிதத்தை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பதே எங்கள் முக்கிய நோக்கம். மீட்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மருத்துவ நிர்வாகத்தின் எங்கள் மூலோபாயம் சரியானது என்பதைக் காட்டுகிறது என்று கூறி உள்ளார்.

புதன்கிழமை நிலவரப்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கொரோனாவுக்கு  41.03 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.
-

Next Story