கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ்
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், பேரழிவை ஏற்படுத்திய, புயலால், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய, பிரான்ஸ் அரசு தயாராக உள்ளது.
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க, இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்க்கிறது.இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 152,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,065 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story