ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்


ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 5 Jun 2020 8:10 AM IST (Updated: 5 Jun 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.

புதுடெல்லி

ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான பூகம்பங்கள் தாக்கியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 6:55 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையத்தின் தரவை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஹம்பியில்  4.0 ரிக்டர் அளவிலான லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை

Next Story