தேசிய செய்திகள்

"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + PM Modi pledges USD 15 million to global vaccines alliance GAVI

"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு

"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" 15 மில்லியன் டாலர்  நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருங்கிணைத்த உலகளாவிய மருத்துவ மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், ஐநா.குழுக்கள் உள்ளிட்டோர் இணைய வழியாக பங்கேற்றனர்.

இதில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா துணைநிற்கும் என்றார்.ஜிஏவிஐ( GAVI) என்ற இந்த அமைப்பு உலக நாடுகளின் ஒற்றுமையுணர்வுக்கு அடையாளம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

உயிர்காக்கும் மருந்துகள், கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் போன்றவை தயாரிக்க இந்த அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலக நாடுகள் யாவும் ஒரே பொது எதிரியுடன் தற்போது போராடி வருவதாக தெரிவித்த மோடி, இந்தியாவில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு நோய்கள் பரவாமல் இருக்க தமது அரசு இந்திர தனுஷ் என்ற தடுப்பூசிகளைப் போடும் திட்டத்தை அமல்படுத்தி வருவது குறித்தும் விளக்கினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
2. ”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
3. லடாக் பயணத்தின் போது சிந்து நதியில் பூஜை செய்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று லடாக் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது சிந்து நதியில் சிந்து தர்ஷன் பூஜைகளை செய்துள்ளார்.
4. "பிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும்" - காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
5. பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரை
கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.