சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 6 Jun 2020 6:08 AM GMT (Updated: 6 Jun 2020 2:16 PM GMT)

விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கவுகாத்தி

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆலோசகரும், அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமிடம் சில நாட்களுக்கு முன்பு மொபைல் சார்ஜர் கேபிளை தவறாக உட்கொண்டதால் அவருக்கு வயிற்று வலி இருப்பதாகத் கூறினார்.

இதைதொடர்ந்து டாக்டர்  அவருக்கு அறுவைசிகிச்சை செய்து உள்ளார்.ஆனால்  அவரது இரைப்பைக் குழாயில் எதுவும் கிடைக்காததால் அந்த நபர் பொய் சொலவதாக நினைத்தார். ஆனால் நோயாளி தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக கூறவே அதை தொடர்ந்து முழு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது அப்போது நோயாளியின் சிறுநீர்ப்பையில் ஒரு மொபைல் சார்ஜரின் கேபிள் கார்டு இருப்பது  கண்டறியப்பட்டது.

இது குறித்து டாக்டர் இஸ்லாம் கூறியதவது:-

அந்த நபர் தனது ஆண்குறி வழியாக மொபைல் சார்ஜிங் கேபிளை நுழைத்து உள்ளார். அது வெற்றிகரமாக அகற்றபட்டு நோயாளி தற்போது குணமடைந்து வருகிறார்.

அந்த நபர்  உண்மையைச் சொல்லி இருந்தால்  அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்க முடியும். ஆண்குறி சிறுநீர்க்குழாய் வழியாக அதனை அகற்றி இருக்கலாம்.

பாலியல் இன்பம் பெற மனிதன் தனது ஆண்குறி வழியாக பொருட்களை செருகும் பழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது. "இந்தச் செயலை சிறுநீர்ப்பை சுய இன்பம் அல்லது சிறுநீர்ப்பை ஒலித்தல் என்று அழைக்கலாம். அவரது விஷயத்தில்,  சிறுநீர்ப்பையில் இணைக்கப்பட்ட  தண்டு சிக்கி கொண்டது  எனது 25 ஆண்டுகால மருத்துவ  வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழக்கை நான் கண்டதில்லை" என்று கூறினார்

இது குறித்து டாக்டர் இஸ்லாம் தனது பேஸ்புக் பக்கத்தில்  "அறுவை சிகிச்சையில் ஆச்சரியங்கள்! என்ற தலைப்பில் பதிவிட்டு உள்ளார்.

Next Story