கேரளாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தகவல்


கேரளாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:03 PM IST (Updated: 6 Jun 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள். மேலும் 34 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 16 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 12 பேர் மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 11 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 10 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 9 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 4 பேர் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 34 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 10 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று 50 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இவர்களில் 30 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 6 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 5 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா ஒருவர் காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 762 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,83,097 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,81,482 பேர் வீடுகளிலும், 1,615 மருத்துவமனைகளிலும் உள்ளனர். 

கேரளாவில் தற்போது 1,029 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மேலும் 10 ஹாட்ஸ்பாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 138 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story