மோட்டார் வாகன ஆவணங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு
வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. 5-வது கட்ட ஊரடங்கில் கொரோனா அல்லாத பகுதிகளில் மத்திய , மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அனைத்துவித வாகன பர்மிட்டுகளுக்கான காலக்கெடுவும் செப்டம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பிரிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Related Tags :
Next Story