டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை


டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை
x
தினத்தந்தி 9 Jun 2020 7:39 PM IST (Updated: 9 Jun 2020 7:48 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில், கொரோனா வைரஸ் தாக்குதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. நேற்று முன்தினம், காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை நடைபெற்றது.  

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நெகட்டிவ் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

Next Story