தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 4:33 PM IST (Updated: 10 Jun 2020 5:02 PM IST)
t-max-icont-min-icon

2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி,

15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்  தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.



Next Story