டெல்லியில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜூன் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.
இந்தநிலையில், டெல்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,501 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கு புதிதாக 1,501 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 32,810 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,245 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 984 பேர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story