குஜராத்தில் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு
குஜராத் மாநிலம் கிர் காடுகளில் வசிக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆசிய சிங்கங்களின் கடைசி புகலிடம் எனப்படும் கிர் சரணாலயம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன.
2015-ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 523 ஆக மட்டுமே இருந்தது.
இந்நிலையில் சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு கடந்த மூன்று மாதங்களாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கிர் காடுகளில் வசித்துவரும் சிங்கங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 29 சதவீதம் அதிகரித்து 674 என்ற எண்ணிக்கையில் காணப்படுகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே குஜராத்தில் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்து உள்ளார். சிங்கங்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது. குஜராத் மக்களுக்கும் இந்த முயற்சிக்கு வழி வகுத்த அனைவருக்கும் பெருமை என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Related Tags :
Next Story