மராட்டியத்தில் பலி எண்ணிக்கையில் உச்சத்தை தொட்ட கொரோனா: ஒரே நாளில் 149 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் ஆட்கொல்லி நோய்க்கு இன்று ஒரேநாளில் 149 பேர் பலியானார்கள்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொற்று நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது.
மாநிலத்தில் இந்த மாதம் முதல் 8 நாளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 041 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு ஒரேநாளில் 149 பேர் பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் வைரஸ் நோய்க்கு 3 ஆயிரத்து 438 பேர் உயிரிழந்து உள்ளனர். 44 ஆயிரத்து 517 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 1879 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related Tags :
Next Story