கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ராஜஸ்தான் மாநில எல்லைகள் ‘சீல்’ வைப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ராஜஸ்தான் மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 11 ஆயிரத்து 368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை மாநிலங்களுடனான அனைத்து எல்லைகளையும் ராஜஸ்தான் அரசு நேற்று ‘சீல்’ வைத்தது.
இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ள அந்த மாநில டி.ஜி.பி. எம்.எல்.லாதர், ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சான்றிதழ் இல்லாமல் ராஜஸ்தானில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளி மாநிலங்களில் இருந்து யாரும் உள்ளே வரவோ முடியாது என்றும் கூறி உள்ளார்.
போக்குவரத்தை கட்டுப்படுத்த மாநில எல்லைகள் மட்டுமின்றி, முக்கிய சாலைகள் மற்றும் ரெயில், விமான நிலையங்கள் அருகேயும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், இந்த கட்டுப்பாடு ஒரு வாரம் நீடிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story