தேசிய செய்திகள்

ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன? + "||" + Fake Zee News Graphic Claims Total Lockdown From June 15

ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன?

ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன?
ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல் வெளியானது ஆனால் அது உண்மை இல்லை என்றும் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 5 வது கட்ட  ஊரடங்கில் பல் வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்று தகவல் வெளியானது.

வடமாநில ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. விமானம் மற்றும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் அந்த புகைப்படம் போலி என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளது. விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படம் அதை மாற்றி வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

உள்நாட்டு விமான சேவை மற்றும் ரெயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டும் வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் - மு.க ஸ்டாலின்
அரசை நம்பாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. இன்று முழு ஊரடங்கு நெல்லையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுவதால் நெல்லையில் நேற்று கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
3. மாநகராட்சிகளில் சிறிய கோவில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு நாளை முதல் அனுமதி-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளில் சிறிய கோவில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
4. இன்று முதல் கடைகளில் தேநீர் அருந்த அனுமதி - முழுமையாக இயங்க தொடங்கிய தேநீர் கடைகள்
இன்று முதல் கடைகளிலேயே தேநீர் அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
5. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...