புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி: இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாகியதுடன், 357 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாகியதுடன், 357 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா 357 பேரை உயிரிழக்க செய்ததுடன், 9,997 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த தகவலை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலங்களில் புதிதாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், நோயில் இருந்து குணமடைந்தவர்கள், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மராட்டிய மாநிலத்தில் புதிதாக 149 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 79 பேரும், குஜராத்தில் 34 பேரும், உத்தரபிரதேசத்தில் 20 பேரும், தமிழகத்தில் 19 பேரும், மேற்குவங்காளத்தில் 17 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும், மத்தியபிரதேசம் மற்றும் அரியானாவில் தலா 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் தலா 3 பேரும், கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா 2 பேரும், ஆந்திரா, பீகார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா ஒருவர் என ஒரே நாளில் மொத்தம் 357 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,102 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 3,438 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,347, டெல்லியில் 984, மேற்குவங்காளத்தில் 432, மத்தியபிரதேசத்தில் 427, தமிழகத்தில் 349, உத்தரபிரதேசத்தில் 321, ராஜஸ்தானில் 259, தெலுங்கானாவில் 156 பேரையும் கொரோனா உயிரிழக்க செய்துள்ளது.
ஆந்திராவில் 78, கர்நாடகாவில் 69, பஞ்சாபில் 55, அரியானாவில் 52, ஜம்மு காஷ்மீரில் 51, பீகார் 33, கேரளா 18, உத்தரகாண்ட் 15, ஒடிசா 9, ஜார்கண்ட் 8, சத்தீஸ்கார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 6, சண்டிகாரில் 5, அசாமில் 4, திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் 21,521, உத்தரபிரதேசத்தில் 11,610, ராஜஸ்தானில் 11,600, மத்தியபிரதேசத்தில் 10,049, மேற்குவங்காளத்தில் 9,328, கர்நாடகாவில் 6,041, பீகாரில் 5,710, அரியானாவில் 5,579, ஆந்திராவில் 5,269, ஜம்மு காஷ்மீரில் 4,509, தெலுங்கானாவில் 4,111, ஒடிசாவில் 3,250, அசாமில் 3,092, பஞ்சாபில் 2,805, கேரளாவில் 2,161, உத்தரகாண்டில் 1,562, ஜார்கண்டில் 1,489, சத்தீஸ்காரில் 1,262 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
திரிபுராவில் 895 பேரும், இமாசலபிரதேசத்தில் 451 பேரும், கோவாவில் 387 பேரும், சண்டிகாரில் 327 பேரும், மணிப்பூரில் 311 பேரும், நாகாலாந்தில் 128 பேரும், புதுச்சேரியில் 127 பேரும், லடாக்கில் 115 பேரும், மிசோரத்தில் 93 பேரும், அருணாசலபிரதேசத்தில் 57பேரும், மேகாலயாவில் 44 பேரும், அந்தமான் நிகோபர் தீவில் 34 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 26 பேரும், சிக்கிமில் 13 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
புதிதாக பாதிப்புக்கு உள்ளான 10 ஆயிரம் பேருடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,86,579 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,41,029 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,37,448 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story