இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டியது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டியது.
x
தினத்தந்தி 13 Jun 2020 10:50 AM IST (Updated: 13 Jun 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஒரே நாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1.45 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,884 ஆக அதிகரித்து உள்ளது.மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993, ஆக உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

டெல்லியின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 36,000 ஐத் தாண்டியது,  இறந்தவர்களின் எண்ணிக்கை 1,214 ஆக உயர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில்  பாதிப்புகள் 1,01,141 ஆகவும், தமிழகம் 40,698 ஆகவும், டெல்லி 36,824 ஆகவும் உள்ளது.




Next Story