கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 3,380 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,380 ஆக உயர்வடைந்து உள்ளது.
புனே,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 311 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் மிக அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 568 பேர் இதன் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 3,380 ஆக உயர்வடைந்து உள்ளது.
ஆறுதலளிக்கும் வகையில், 51 ஆயிரத்து 392 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். 49 ஆயிரத்து 346 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் (42 ஆயிரத்து 687 பேர்), டெல்லி (38 ஆயிரத்து 958 பேர்) மற்றும் குஜராத் (23 ஆயிரத்து 38 பேர்) ஆகியவை உள்ளன.
Related Tags :
Next Story