இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல,எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது -ராஜ்நாத் சிங்
இந்திய-நேபாள உறவு சாதாரணமானது அல்ல, உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி
நேபாளத்துடனான அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில்,பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், நேபாளத்திற்கு இந்தியர்களிடையே ஒருபோதும் கசப்பு இருக்க முடியாது" என்று கூறி உள்ளார்.
பா,ஜனதா கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
லிபுலேக்கிலிருந்து தார்ச்சுலா வரை சாலை அமைப்பதன் காரணமாக நேபாள மக்களிடையே ஏதேனும் தவறான கருத்து எழுந்திருந்தால், நாம் ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஒரு தீர்வைக் காணலாம்
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிணைப்பு சாதாரணமானது அல்ல. நாங்கள் ரோட்டி-பேட்டியால்' பிணைக்கப்பட்டுள்ளோம், உலகில் எந்த சக்தியும் அதை உடைக்க முடியாது.இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அரசு தவறான புரிந்துணர்வை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் என கூறினார்.
Related Tags :
Next Story