நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் - ஜனாதிபதி இரங்கல்


நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் - ஜனாதிபதி இரங்கல்
x
தினத்தந்தி 18 Jun 2020 2:45 AM IST (Updated: 18 Jun 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சீன ராணுவத்துடனான சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தி உள்ளார். தனது இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த அனைவரும் இந்திய ஆயுதப்படைகளின் சிறந்த பாரம்பரியத்தை நிலைநாட்டி உள்ளனர். அவர்களின் வீரம், தேசத்தின் நினைவுகளில் எப்போதும் நிலைத்திருக்கும். அவர்களுடைய குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க உயிர்நீத்த அவர்களின் துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் முப்படைகளின் தலைமை தளபதி என்ற முறையில் நான் தலைவணங்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story