சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் டிக்- டாக் உள்பட மொபைல் ஆப்களுக்கு தடை?
சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் 50 சீன மொபைல் ஆப்களை தடை செய்ய அறிவுருத்தப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
சீனா அடுத்த கட்டமாக இந்தியாவை சேர்ந்த அரசு இணையதளங்கள், ஏடிஎம்முடன் தொடர்புடைய வங்கி அமைப்பு ஆகியவற்றை குறிவைத்து செவ்வாய், புதன்கிழமையன்று சீனாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடு பகுதியில் இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்குடுவில் சீன ராணுவ மக்கள் விடுதலைப்படையிலுள்ள ஒரு பிரிவின் தலைமையகம் உள்ளது. சீன அரசு ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர்களும் அங்கே அதிகம் உள்ளனர். இதனால் சீன ராணுவ பின்னணி இதில் இருக்கும் என உறுதியாக நம்புவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தடை செய்யப்பட வேண்டிய 50 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் மூலம் நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தரவு இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படுகிறது. டிக்-டாக், ஹலோ, யுசி உலாவி போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.
ஆனால் பயனர் தரவை நாட்டிற்கு வெளியே அனுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த நிறுவனங்கள் மறுத்துள்ளன.
Related Tags :
Next Story