மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2020 9:33 PM IST (Updated: 18 Jun 2020 9:33 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிசிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய தங்கும் வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊதியம் வழங்குதல் தொடர்பான சுய உத்தரவுகளை மாநில அரசுகள் இன்றைக்குள் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மருத்துவமனைகள் பின்பற்றுகின்றனவா? என்பதை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களின் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story