தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு + "||" + Coronavirus severity intensifies plasma therapy for Delhi Health Minister

கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு

கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு
டெல்லி சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது.  இதனால் அவர் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.  டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் ஏற்கனவே கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார்.  இதில், கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.

இந்நிலையில், டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 
நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்தது.  இதனையடுத்து, அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டு வருகிறது என சுகாதார மந்திரியின் அலுவலகம் இன்று தெரிவித்து உள்ளது.  இந்நிலையில், அவர் சாகேத் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி சுகாதார மந்திரி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார்
டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து உள்ளார்.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம்; ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு டாக்டர் உள்பட 10 பேர் இன்று பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...