ராஜ்யசபை தேர்தல்; ஆந்திர பிரதேசத்தில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி


ராஜ்யசபை தேர்தல்; ஆந்திர பிரதேசத்தில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 19 Jun 2020 7:58 PM IST (Updated: 19 Jun 2020 7:58 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜ்யசபை தேர்தலில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த 19 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  இவற்றில் ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா 4, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது.  இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

இதுபற்றிய முடிவில், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் (4) கைப்பற்றியுள்ளது.

இதேபோன்று மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 2 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளன.  ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளையும், பா.ஜ.க. ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளன.

Next Story