மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு


மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2020 9:15 AM IST (Updated: 20 Jun 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,12 பேர் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர்.

புதுடெல்லி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த  நிலையில் அதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், ஜோதிராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புவனேஷ்வர் கலிதா, பிரேம் சந்த் குப்தா ஆகியோர் 5-ஆவது முறையும், திருச்சி சிவா, கேசவ் ராவ், பிஸ்வஜீத் டைமாரி, பரிமல் நத்வானி ஆகியோர் 4-ஆவது முறையும், சரத் பவார்,  திக்விஜய் சிங் உள்ளிட்டோர் 2-ஆவது முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தினேஷ் திரிவேதி, நபம் ரபியா ஆகியோர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேவே கவுடா, சிபு சோரன் ஆகியோர் 2-ஆவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Next Story