ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் - 4 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியல் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.
புதுடெல்லி,
பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். சிறிய ரக ஆயுதங்கள், மோர்டர் வகை குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story