கொரோனா பாதிப்பு எதிரொலி; 10ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ய ஆந்திர பிரதேச அரசு முடிவு
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக 10ம் வகுப்புக்கான பொது தேர்வை நடத்த வேண்டாம் என மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அமராவதி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஆந்திர பிரதேசத்தில் வரும் ஜூலை 10ந்தேதியில் இருந்து 10ம் வகுப்புக்கான பொது தேர்வை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேர்வை நடத்துவது பற்றி மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டது.
இதுபற்றி ஆந்திர பிரதேச கல்வி மந்திரி அடிமுலாபு சுரேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா பாதிப்பு எதிரொலியாக மாணவ மற்றும் மாணவியர்களின் நலனை முன்னிட்டு 10ம் வகுப்புக்கான பொது தேர்வை நடத்த வேண்டாம் என மாநில அரசு முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story