மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மனைவிக்கு கொரோனா; நிர்வாகிகள் அதிர்ச்சி


மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மனைவிக்கு கொரோனா; நிர்வாகிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Jun 2020 6:43 PM IST (Updated: 20 Jun 2020 6:43 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போபால்,

நாடாளுமன்றத்தில் காலியாக இருந்த 19 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி நேற்று நடைபெற்றது.  இவற்றில் ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத்தில் தலா 4, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 3, ஜார்க்கண்டில் 2, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயாவில் தலா ஒன்று ஆகிய காலி இடங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.  இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

இதேபோன்று மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் வாக்களித்து உள்ளார்.  இதன்பின்பு அவர் கட்சி கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.  இந்நிலையில், அவருக்கு நடந்த கொரோனா மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் வெளியாகி உள்ளன.  இதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.  இதேபோன்று அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story