தெலுங்கானாவில் மேலும் 546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று


தெலுங்கானாவில் மேலும் 546 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 20 Jun 2020 10:19 PM IST (Updated: 20 Jun 2020 10:19 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7072 ஆக உயர்ந்துள்ளது.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

இந்த நிலையில், தெலுங்கானாவில் இன்று புதிதாக 546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தெலுங்கானாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7072 ஆக உயர்ந்துள்ளது. 

 கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 203 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story