தேசிய செய்திகள்

இன்று சர்வதேச யோகா தினம்1 கோடி பேர் சூரிய நமஸ்காரம்-மத்திய மந்திரி நம்பிக்கை + "||" + international Yoga Day: Union Minister says hoping 10 million people will join him in performing Surya Namaskar on Yoga Day

இன்று சர்வதேச யோகா தினம்1 கோடி பேர் சூரிய நமஸ்காரம்-மத்திய மந்திரி நம்பிக்கை

இன்று சர்வதேச யோகா தினம்1 கோடி பேர் சூரிய நமஸ்காரம்-மத்திய மந்திரி நம்பிக்கை
சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய கலாசாரம், சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் படேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “ சர்வதேச யோகா தினத்தையொட்டி நான் புராண கிலாவில் சூரிய நமஸ்காரம் செய்வேன். அப்போது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து, என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தை உலகுக்கு பரிசாக வழங்கியுள்ளார். நாம் நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வோம்” என கூறி உள்ளார்.

அவர் சமூக வலைத்தளம் ஒன்றில் ஒரு வீடியோ செய்தியும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் இன்று காலை 7 மணிக்கு தன்னுடன் 1 கோடிப்பேர் சூரிய நமஸ்காரத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு
ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
2. வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டு தனிமையில் இருந்த மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.