கொரோனா பாதிப்பு; மும்பையில் தொடர்ந்து 2வது நாளாக பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது
மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 100ஐ கடந்து உள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதனை மக்கள் தவிர்க்கும்படி வலியுறுத்தப்படுகிறது.
நாட்டில் மராட்டியம் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 100ஐ கடந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 136 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது, ஒரு நாளில் ஏற்பட்ட மிக அதிக அளவிலான பாதிப்பு ஆகும்.
இதனால் மும்பையில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 561 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 114 பேர் பலியாகி இருந்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக மும்பையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 100ஐ கடந்து உள்ளது.
Related Tags :
Next Story