டெல்லி சிறையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு கைதி பலி
டெல்லி சிறையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளான ஆயுள் கைதி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மண்டோலி நகரில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தவர் கன்வர் சிங் (வயது 62). கடந்த 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
கடந்த 15ந்தேதி சிறையில் இருந்த அவர் திடீரென உயிரிழந்து விட்டார். அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தன. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. எனினும், அதற்கான அறிகுறிகள் இல்லாமலேயே அவர் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிங்குடன் தொடர்பில் இருந்த 28 கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனைகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். டெல்லி சிறையில் கைதி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியானது இதுவே முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story