குஜராத்தில் மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக உயர்வு
குஜராத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,317 ஆக உயர்ந்துள்ளது.
அகமதாபாத்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை.
குஜராத்தில் இன்று மேலும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,317 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,357 பேர் குணம் அடைந்து இருப்பதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
*அதேபோல் கோவா மாநிலத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 818 ஆக உயர்ந்துள்ள்ளது.
*சத்தீஷ்கர் மாநிலத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சத்தீஷ்கரில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2273 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1421 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story