மேற்கு வங்காளத்தில் வரும் ஜூலை 31ந்தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்


மேற்கு வங்காளத்தில் வரும் ஜூலை 31ந்தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்
x
தினத்தந்தி 23 Jun 2020 5:58 PM IST (Updated: 23 Jun 2020 5:58 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வருகிற ஜூலை 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என கல்வி மந்திரி தெரிவித்து உள்ளார்.

கொல்கத்தா,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு கூடுதலாக உயர்ந்து உள்ளது.  இதில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  இதேபோன்று மேற்கு வங்காளத்தில் 569 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.

14 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.  5 ஆயிரத்து 100க்கும் கூடுதலானோர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை 8 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா பாதிப்பினால் மேற்கு வங்காளத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வருகிற ஜூலை 31ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

Next Story